தனுஷின் விவாகரத்துக்கு முடிவு குறித்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்தால் ரஜினியின் ரசிகர்கள் பலர் கடும் கோபத்தில் உள்ளனர். சிலர் ஒரு படி மேலே போய் ரஜினி ரசிகர்கள் தனுஷை அண் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக பலமுறை தெரிவித்துள்ளார் .ரஜினியின் காலா படத்தை நடிகர் தனுஷ்தான் தயாரித்திருந்தார். ஆனால் அந்த படத்தில் கூட அவர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கவில்லை.
இந்நிலையில் நடிகர் ரஜினியின் 170 வது படத்தை மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா தான் தயாரிப்பார்கள், என்றும் அதனை தனுஷ் தான் இயக்குவார் என்றும் கூறப்பட்டு வந்தது. தற்போது இந்த விவாகரத்து முடிவுக்கு பின்னர் இந்த சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது, அப்போது ரஜினிக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இருவரும் தங்கள் விருது வாங்கிய விருதுகளுடன் போட்டோ எடுத்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தனுஷின் விவாகரத்து ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.