இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது கவாஸ்கர், “பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று. அந்த அணியில் இந்த முறையும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த வீரரும் இருப்பதாக தெரியவில்லை. எனவே பஞ்சாப் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வது சுலபமான விஷயம் அல்ல.
இருப்பினும் அவர்கள் மீது எதிர்பார்ப்பு குறைவாகவே இருப்பதால், எந்தவித அழுத்தமும் இல்லாமல் வீரர்கள் அவர்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் அவர்களுக்கு அது சாம்பியன் பட்டத்தை பெற்று தருமா ?என்பது சந்தேகம் தான்” என்று கூறியுள்ளார். நாளை (மார்ச்.27) நவி மும்பையில் உள்ள விஜய் பட்டெல் ஸ்டேடியத்தில் தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.