வான்வழி தாக்குதல் மூலம் இராணுவ லாரிகளை தாக்கி அழித்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இராணுவ படைகள் சர்ச்சையிலுள்ள நாகோர்னோ-கரபாக் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இரு படைகளும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சம்மதித்த போதிலும் மீண்டும் ஒருவருக்கு எதிராக ஒருவர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இரு படைகளுக்கு இடையேயான சண்டையை நிறுத்துவதற்கான முயற்சிகள் செய்தும் தொடர்ந்து தங்களது தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து அஜர்பைஜான் இராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் ஆர்மீனிய லாரிகளை அழித்துள்ளது. போர் மண்டலத்தில் அடையாளம் காணமுடியாத இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 ஆர்மீனிய லாரிகளை வான்வழி தாக்குதல் மூலம் அழிக்கப்படும் அந்த வீடியோவை அஜர்பைஜான் பாதுகாப்பு அமைச்சகம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
https://twitter.com/i/status/1322823243494006784