நடிகர் அஜித் குமாரின் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருப்பதாக பேசப்படுகிறது. மேலும் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் 61ஆவது திரைப்படத்தையும் இவர்தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பதினோரு வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித் வானொலியில் பேசியபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.