பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் விண்கல் ஒன்று வானில் ஒளிர்ந்தபடி பூமியை நோக்கி பாய்வதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் கடந்த சனிக்கிழமையன்று இரவு 7:15 மணி அளவில் வானில் ஒளிர்ந்தபடி பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்தது. இதை சிலர் வீடியோ எடுத்து தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.
இந்த விண்கல் புவியீர்ப்பு விசையால் பூமியை நோக்கி அதிவேகமாக ஈர்க்கப்பட்டு வளிமண்டலத்தில் ஏற்படும் உராய்வுகளால் தீப்பற்றி எரிந்தது. இந்த கண்கொள்ளாக் காட்சியை காணும்போது மனதில் நினைத்தது நடக்கும் என பல நாடுகளிலுள்ள மக்கள் நம்புவதால் இந்த அதிசயத்தை அனைவரும் ஆச்சரியமாக வியந்து ரசித்தனர்.