Categories
சினிமா

“வானத்திலும் ஒலிக்க உள்ள இளையராஜாவின் பாடல்”…. நாட்டிற்காக அவர் செய்த காரியம்…. குவியும் பாராட்டு….!!!

இளையராஜாவின் பாடல் சாட்டிலைட் வழியாக விண்ணில் ஒலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசையமைப்பாளர் இளையராஜாவின் புகழ் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது என்றால் அது மிகையாகாது. அவ்வாறு தனது இசை மழையால் உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களையும் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. அவரின் இசை நாடு தாண்டி கடல் தாண்டி தற்போது விண்ணை தாண்டியும் ஒலிக்கப் போகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த குறைந்த எடை கொண்ட சாட்டிலைட் ஒன்று வரும் சுதந்திர தினத்தன்று இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடலை விண்ணிற்கு எடுத்துச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அவரின் இசைப் பயணத்திற்கு கிடைத்த ஒரு மயில் கல்லாக இருக்கும் என பலர் தெரிவிக்கின்றனர். கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா நிகழ்த்தியிருக்கும் சாதனைகளை வரிசைப்படுத்தி அந்த பாடல் அமைந்துள்ளதாம். இந்த பாடல் வரிகளை சுவானந்த் கிர்கிரே என்பவர் இந்தியில் எழுதியுள்ளாராம். இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைக்க உள்ளாராம். இதனை கேட்டு ரசிகர்கள் இளையராஜாவை மனதார பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |