பிரிட்டிஷை சேர்ந்தவர் கிரஹாம் அஸ்கி (58). இவர் உலகின் மோசமான கழிவறையை காண, இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.3 கோடி செலவு செய்து 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால் எங்கும் அவரால் அந்த கழிப்பறையை கண்டு பிடிக்க முடியவில்லையாம். எப்படியோ முயற்சி எடுத்து கடைசியாக தேடி அலைந்து இறுதியில் தஜிகிஸ்தானின் அய்னி பகுதியில் அந்த கழிவறையை அவர் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில்”அந்த கழிவறையை ‘நரகத் துளை’ என குறிப்பிடுவது தான் சரியாக இருக்கும். அதை வார்த்தைகளில் சொன்னால் நீங்கள் படிக்கும்போது வாந்தி எடுப்பது நிச்சயம்” என கிரஹாம் கூறியுள்ளார்.