தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தனுஷ் நடித்துவரும் திரைப்படம் “வாத்தி”. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கும் இப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் படக்குழுவுக்கும் தனுஷுக்கும் இடையே பட வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பில் ஏதோ ஒரு முரண்பாடு ஏற்பட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவி இருந்தது.
அந்த படத்தின் வெளியீட்டுத்தேதி குறித்த அறிவிப்பானது செப்..19ஆம் தேதி வெளியாகியபோதும், அப்போஸ்டரை தனுஷ் கண்டுக்கொள்ளவில்லை. அத்துடன் அதனை ரிடுவிட்டும் செய்யவில்லை. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் படத்தின் புது போஸ்டரை தீபாவளி வாழ்த்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அப்போஸ்டரில் வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிடாமல் இருந்தனர்.
எனினும் மதியத்திற்கு மேல் அதன் தயாரிப்பாளர் வெளியீட்டுத் தேதியுடன்கூடிய அதே போஸ்டரை மீண்டும் வெளியிட்டார். தனுஷ் நடித்து அடுத்து வெளிவரயிருக்கும் திரைப்படம் “வாத்தி” தான். இருப்பினும் இப்படம் சம்பந்தப்பட்ட எந்தஒரு தகவலையும் தனுஷ் கண்டுகொள்ளாதது அவரது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களோ, இயக்குனரோ எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகின்றனர்.