வாணி போஜன், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மலேசியா டூ அம்னீஷியா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். இதையடுத்து இவர் அசோக் செல்வன் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தாலும் இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து ‘டிரிபிள்ஸ்’ வெப் சீரிஸில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.
Here you Go! #MalaysiaToAmnesia Official Trailer – https://t.co/GNuhqpZYAL
A ZEE5 Original Film from 28th May #SolvathellamPoi@Radhamohan_Dir @actor_vaibhav @vanibhojanoffl #msbhaskar #karunakaran @Premgiamaren @ZEE5Tamil @teamaimpr
— Vani Bhojan (@vanibhojanoffl) May 18, 2021
மேலும் வாணி போஜன் நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான லாக்கப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் வைபவ், வாணி போஜன் இருவரும் இணைந்து ‘மலேசியா டூ அம்னீஷியா’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படம் வருகிற மே 28-ஆம் தேதி ஜீ5 தளத்தில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது .