Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப்பில் இனி இதை கூட செய்யலாம்….. ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஜாக்பாட்….!!!

Whatsapp மூலமாக மக்களை கவரும் வகையில் ஜியோ மார்ட் whatsapp மூலம் ஷாப்பிங் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் ஆன்லைனில் தான் ஷாப்பிங் செய்து வருகின்றனர். ஷாப்பிங் தளங்களை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்கின்றன. தற்போது ஏராளமான ஷாப்பிங் வலைதளங்கள் வந்துவிட்டது. வீட்டில் இருந்தவாறு இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு ஆர்டர் செய்து விடுகின்றன. இதனால் ஆன்லைன் ஷாப்பிங் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் whatsapp மூலமாக ஜியோ மார்ட் வர்த்தகத்தை தொடங்கும் நோக்கில் புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளது.

அதாவது சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குடும்பத்தின் 45 ஆவது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் வர்த்தக பிரிவுகளின் நிலை, எதிர்கால திட்டம், புதிய திட்டம் ஆகியவற்றை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதில் ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரிவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள whatsapp jiomat திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜியோ மார்ட் ஆப் இல்லாமலேயே whatsapp மூலமாக நாம் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். அதே நேரம் இந்த திட்டத்தால் whatsapp நிறுவனத்தின் பேமெண்ட் சேவையும் விரிவடையும் என்ற நோக்கில் இதை அறிமுகம் செய்ய உள்ளது.

அதன்படி நீங்கள் உங்களது செல்போனில் முதலில் ஜியோ மார்ட் எண்ணை +917977079770 சேமிக்க வேண்டும். அந்த எண்ணுக்கு ஹாய் என்ற குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். பின்னர் கெட் ஸ்டார்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் அடுத்து வரும் பக்கத்தில் “view Catalog” என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான பொருள்கள் அதாவது பழங்கள், காய்கறிகள் உணவுப் பொருட்கள் போன்ற திரையில் தோன்றும் பொருட்களை தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு தேவையான அனைத்து தயாரிப்புகளையும் சேர்த்து சென்ட் டு பிசினஸ் என்பதை கிளிக் செய்து கன்ஃபார்ம் என்பதை கொடுத்தால் அந்த பொருள் ஆர்டர் செய்யப்பட்டு விடும்.

Categories

Tech |