உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
வாட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பிய மற்றும் தேவையில்லாத செய்திகளை நீக்குவதற்காக குறிப்பிட்ட நேரம் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இனி 2 நாள்களுக்கு பிறகும் Delete For Everyone ஆப்ஷனை யூசர்கள் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உங்களது வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டால் உங்களது மொபைலுக்கு அலர்ட் அனுப்பப்படும். அதில் Allow அல்லது Deny என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்ஆப் செய்திகள் பல திருடப்படுவதால் WhatsApp’s two-step verification முறையில் சில முறைகளை புகுத்த whatsapp திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட் கூடிய விரைவில் வெளியிடப்படும்.