Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்து மிரட்டினாரா…? இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை முயற்சி…. கோவையில் பரபரப்பு…!!

வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகியான நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் வீட்டில் வைத்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அதன்பிறகு நவீன் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் கோவில் முன் நின்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இரவு நேரத்தில் கோவில் முன்பு நின்று என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனைவரையும் அங்கிருந்து செல்லும்படி கண்டித்துள்ளார். இதனால் நவீன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையே மாரி படத்தில் நடிகர் தனுஷ் போலீஸ் ஒருவரை பார்த்து இந்த ஏரியா உன் கண்ட்ரோலில் இருக்கலாம் ஆனால் நான் அவுட் ஆப் கண்ட்ரோல் என்று வசனம் பேசும் காட்சியை நவீன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்து அதில் இது புதிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் சப்-இன்ஸ்பெக்டர் நவீனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் உன்னை கைது செய்து சிறையில் தள்ளி விடுவேன் என சப்-இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். இதனால் நவீன் தனது வீட்டில் இருந்த சாணி பவுடரை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |