கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிஜிலாக்கர் எனும் ஆன்லைன் டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக டிரைவிங் லைசென்ஸ், வாகனப்பதிவு மற்றும் கல்விப்பிரதிகள் ஆகிய பல்வேறு முக்கியமான ஆவணங்கள், சான்றிதழ்களின் டிஜிட்டல் வெர்ஷன்களை பெற்றுக்கொள்ள இயலும். MyGov Helpdesk என்பதை பயன்படுத்தி ஆதார் அட்டை (அல்லது) பான் கார்டு ஆகிய முக்கியமான ஆவணங்களை டிஜிலாக்கரில் இருந்து சீக்கிரமாக பெற்றுக் கொள்ளலாம்.
ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் வாயிலாக நீங்கள் விரைவாகவே இதிலிருந்து உங்களுக்கு வேண்டிய ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம். டிஜிலாக்கர் வெப்சைட் (அல்லது) ஆப் குறித்த விவரம் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லை என்றால், இந்த வாட்ஸ்அப் சாட்போட் உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். தற்போது My Gov Help desk என்பதை பயன்படுத்தி வாட்ஸ்அப் வாயிலாக முக்கியமான ஆவணங்களை எப்படி டவுன்லோட் செய்யலாம் என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்
# உங்களது மொபைல் காண்டாக்ட்டில் MyGov HelpDesk- ஐ தொடர்பு கொள்ள பயன்படும் +91-9013151515 என்ற எண்ணை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
# உங்களது ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
# தற்போது MyGov HelpDesk சாட்போட்டை தேடவேண்டும்.
# இதையடுத்து நமஸ்தே (அல்லது) ஹலோ என டைப்செய்து அந்த எண்ணுக்கு அனுப்பவும்.
# இப்போது அந்த சாட் போட்டில் Digilocker Services (அல்லது) CO-WIN Service என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்குமாறு கேட்கும்.
# உங்களது மெனுவில் இருந்து டிஜிலாக்கர் சேவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இச்சேவை இருந்தால் ஆம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் இல்லை என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# டிஜிலாக்கர் கணக்கு இல்லையெனில் தற்போது அதனை நீங்கள் உருவாக்க வேண்டும்.
# தற்போது உங்களின் 12 இலக்க ஆதார்எண் கேட்கப்படும். அந்த 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு மெனுவில் இருந்து “சென்ட்” என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# இப்போது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பிவைக்கப்படும்.
# அதன்பின் டிஜிலாக்கர் கணக்குடன் தொடர்புடைய ஆவணங்களின் பட்டியலை நீங்கள் பார்க்கலாம்.
# டவுன்லோடு செய்வதற்கு உங்களுக்கு தேவையான ஆவணத்தின் எண்ணை உள்ளிடவும்.
# பின் உங்களது சாட்பாக்சில் உங்களுக்கு தேவையான பிடிஎப் அனுப்பப்படும்.