தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் வாய்ஸ் மெசேஜ்களின் பிளேபேக் வேகத்தை சரி செய்ய அனுமதிக்கும் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளிகளுக்கும், வாட்ஸ்அப் வெப் மற்றும் டெக்ஸ்டாப் பயனாளர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான சொந்த கட்டுப்பாடுகளை பயன்படுத்தி வாய்ஸ் மெசேஜ் களின் பிளேபேக் வேகத்தை 2x அளவுக்கு அதிகரித்துக்கொள்ள முடியும்.