Categories
பல்சுவை

வாட்ஸ்அப் பயனர்களே!…. மறந்தும் இப்படி பண்ணிடாதீங்க?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்று உலகம் முழுதும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் செயலி வந்தபின் பல்வேறு வேலைகள் மிகவும் எளிதாகிவிட்டது. இன்று வணிகம், கல்வி என பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு வாட்ஸ்அப் பெரியளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் வாட்ஸ் அப் குறித்த சிலவிஷயங்களை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஒரு பெரிய இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும். கடந்த சில வருடங்களில் ஸ்பேம் மற்றும் பிஷிங் இணைப்புகள் வாயிலாக வாட்ஸ் அப் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நகர்விலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்களது சிறிய கவனக் குறைவு பெரிய இழப்பை ஏற்படுத்தும். பல்வேறு ஹேக்கர்கள் விழாக்காலங்களில் சலுகைகள் குறித்து லிங்குகளை வாட்ஸ் அப் வாயிலாக நண்பர்கள், தொடர்பில் உள்ள குழுவினருக்கு அனுப்புகின்றனர். அந்த லிங்குகளில் விலை உயர்ந்த பரிசுகள் உள்ளதாக கூறப்படுகிறது. அத்தகைய நிலையில் மக்கள் பேராசை கொண்டு இந்த இணைப்புகளை கிளிக் செய்கின்றனர். இங்கு தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், லிங்குகளைக் கிளிக் செய்தபின், அவர்களின் ஸ்மார்ட் போனில் வேறு இணையதளம் திறக்கப்படும்.

இங்கு அவர்களின் வங்கியின் தேவையான விபரங்களானது கேட்கப்படுகிறது. இதனிடையில் பேராசையில் மக்கள் இந்த முக்கிய விபரங்களை நிரப்புகின்றனர். அதன்பின் ஹேக்கர்கள் கைவரிசையை காட்டி விடுகின்றனர். இதேபோன்று பல்வேறு வாட்ஸ் அப் பயனர்களை குறி வைத்து ஹேக்கர்கள் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த வருடங்களில் இது போன்ற மோசடிகளால் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் பல லட்சம் ரூபாய் இழந்து இருக்கின்றனர். சில வகையான ஸ்பேம் (அ) பிஷிங் இணைப்புகள் உங்களது வாட்ஸ் அப்பில் வந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களது சிறிய கவனக்குறைவு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

Categories

Tech |