Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனர்களே! சைபர் தாக்குதலை தவிர்க்கணுமா?… அப்போ உடனே இதை செய்து முடிங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!

இணையம் பாதுகாப்பு வல்லுநர்கள் வாட்ஸ் அப் பயனாளர்கள் செயலியில் வழங்கப்பட்டுள்ள சிறந்த பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதை உறுதிசெய்யும்படி எச்சரித்து இருக்கின்றனர். அவ்வாறு செய்யத்தவறினால் பயனாளர்கள் மோசடிக்காரர்களால் இலக்காக்கப்படுவர். இதற்கான பல்வேறு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையில்லை எனவும் இதற்குரிய தீர்வு வாட்ஸ்அப்பிலேயே இருக்கிறது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களது முக்கிய செட்டிங்க்ஸில் ஒரு செட்டிங் ஆக்டிவ்வாக இருப்பதை நீங்கள் கண்டிப்பாக உறுதிசெய்ய வேண்டும். அவை டூ-ஸ்டெப் வெரிபிகேஷன் ஆகும். இதன் வாயிலாக ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் (அ) சைபர் தாக்குதல்களுக்கு பலியாகும் வாய்ப்புகள் பன் மடங்கு குறைக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்-ல் டூ-ஸ்டெப் வெரிபிகேஷன் செட்டிங்ஸை ஆக்டிவேட் செய்வது எவ்வாறு?

# முதலாவதாக வாட்ஸ் அப் Settingsஐ திறக்க வேண்டும்.

# பின் அகவுண்ட்டில் டேப் செய்து டூ ஸ்டெப் வெரிபிகேஷன் ஆப்ஷனில் செல்ல வேண்டும்.

# தற்போது அதனை எனேபிள் செய்து, உங்களுக்கு விருப்பமான 6 இலக்க PINஐ உள்ளிட்டு அதை உறுதிப்படுத்த வேண்டும்.

# மின் அஞ்சல் முகவரியைச் சேர்க்க விரும்பவில்லை எனில், நீங்கள் அணுகக்கூடிய மின்னஞ்சல் முகவரியை வழங்கவேண்டும் (அல்லது) தவிர் என்பதை டேப் செய்யவேண்டும்.

# அதன்பிறகு நெக்ஸ்ட் என்பதை டேப்செய்யவும்

# கடைசியில் மின் அஞ்சல் முகவரியை உறுதிசெய்து சேமி (அ) முடிந்தது என்பதைத் டேப் செய்ய வேண்டும்.

# இது ஹேக்கர்கள் உங்களது கணக்கை அணுகுவதை தடுக்கக்கூடிய காவலராக செயல்படும்.

இதனைத் தவிர மேலும் சில முக்கியமான பாதுகாப்பு அமைப்புகளும் இருக்கிறது. இது உங்களது வாட்ஸ் அப் கணக்கில் கூடுதலான பாதுகாப்பை சேர்க்கிறது. அதாவது , டூ-ஸ்டெப் வெரிபிகேஷன் செயல்முறையைத் தவிர்த்து, சைபர்-பாதுகாப்பு நிபுணர்கள் ஸ்க்ரீன் லாக்கை கான்பிகர் செய்ய பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனை அடிக்கடி புதுப்பித்தால், செட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

ஏனென்றால் புது போன் (அ) சாதனத்தில் நீங்கள் வாட்ஸ் அப்-ஐ நிறுவினால், உங்களது தனியுரிமை (அல்லது) பாதுகாப்பு அமைப்புகள் ரீசெட் செய்யப்படும். எனவே நீங்கள் ஸ்க்ரீன்லாக் அம்சத்தை சேர்ப்பது (அ) வேறு மாற்றங்களையும் மீண்டும் செய்ய வேண்டி இருக்கும். அத்துடன் பக் மற்றும் மால்வேரை சரிசெய்ய சமீபத்திய மென் பொருள் இணைப்புகளுடன் உங்களது சாதனம் மற்றும் செயலிகள் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும்.

Categories

Tech |