உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதிகம் பேர் பயன்படுத்தும் முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp உள்ளது. தனது பயனர்களை தவிர whatsapp நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. சமீபகாலமாகவே whatsapp நிறுவனம் பல புதிய அப்டேட்டுகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது இரண்டு மிகப்பெரிய மாற்றங்களை whatsapp கொண்டு வந்துள்ளது.
அதாவது இதுவரை வாய்ஸ் காலில் மட்டுமே 32 பேரை சேர்க்க முடிந்த நிலையில் வீடியோ காலிலும் 32 பேரை சேர்த்துக் கொள்ளலாம். அதனைப் போலவே 512 பேரை மட்டுமே குரூப்புகளின் சேர்க்க முடிந்த நிலையில் இனி 1024 பேரை சேர்த்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.