Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே கவனம்…. மார்ச் 31-ஆம் தேதிக்குள்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களது பான் கார்டு ஆதார் எண் இணைக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் இதை செய்யாவிட்டால் அவர்களின் வங்கி சேவை நிறுத்தப்படலாம் என வங்கி கூறியுள்ளது.

இதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இது பற்றி ஸ்டேட் பாங்க் தனது டுவிட்டர் பக்கத்தில்கூறியுள்ளதாவது  “வாடிக்கையாளர்கள் தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். அப்போதுதான் தடையற்ற  வங்கி சேவையை பெற முடியும். எனவே பான்  எண்னை  ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். அவ்வாறு இணைக்காவிட்டால் பேன் கார்டு  செயலிழந்து விடும்.

முதலில் இதற்கான காலக்கெடு 2021 செப்டம்பர்30 வரை இருந்தது. தற்போது  மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதை இணைப்பதற்கு  முதலில் வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்https://www.incometaxindiaefiling.gov.in/home. இடது பக்கத்தில் உள்ள லிங்க் ஆதார் எண் குறியீடு இருக்கும் அதை அழுத்தவும். இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும் அதில் பேன் ஆதார் மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள உங்களது பெயரை நிரப்ப வேண்டும். ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே இருந்தால்’i have only year of birth in aadhaar card’ என்ற பாக்ஸை குறியீடு செய்ய வேண்டும். அடுத்து கேப்ட்சா குறியீடு மற்றும் போட்டி பீஸ் சரிபார்ப்பு செய்யப்படும் கடைசியாக Link Aadhaar பட்டனை கிளிக் செய்தவுடன் ஆதார் கார்டு பான் கார்டு இணைக்கப்பட்டு விடும்.

Categories

Tech |