தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் நேற்று முதல் தொடங்கியது. இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று இணைப்பு செய்துகொள்ளலாம்.
இந்நிலையில் வாடகைக்கு குடியிருக்கும் நபர் ஆதார் எண்ணை TENANT என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இணைக்கலாம். வாடகை வீட்டில் குடியிருக்கும் வாடகைக்காரர் மாறி வேறு ஒருவர் வருவார் எனில், அவர்கள் முறையே குடிபோகும் வீட்டின் அமையப்பெற்ற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கலாம்.
பழைய ஓனரின் பெயரில் மின் இணைப்பு வைத்திருக்கும் உரிமையாளர்கள் Owner But not name transferred என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இணைக்கலாம். ஆவணமாக பதுவேற்றப்பட்ட ஆதார் tangedco அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, ஆவணமும் பெயரும் பொருந்தினால் அங்கீகரிக்கப்படும், இல்லையெனில் நிராகரிக்கப்படும். அங்கீகரித்தபின் பதிவேற்றத்தின்போது உள்ளிடப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.