கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் தொடங்கிய நாளிலிருந்து இப்பொழுது வரைக்கும் ப்ரோமோஷன் பண்ணியவர்களில் முக்கியமானவர் கூல் சுரேஷ். இந்த நிலையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார். அப்போது படம் வெளியான நாளில் அவருடைய காரை ரசிகர்கள் பலர் உடைத்து விட்டதற்கு நெடிசன்கள் தெரிவித்த கருத்துகளுக்கு தான் தற்போது கூல் சுரேஷ் அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் ஒரு பெரிய ஹீரோவுக்கு கொடுக்க வேண்டிய வரவேற்பு சிம்புவின் ரசிகர்களும் என்னுடைய ரசிகர்களும் எனக்கு கொடுத்து வருகின்றார்கள். கமெண்டில் எல்லோரும் திட்டி இருக்கீங்க காரை மட்டும் தான் அடிச்சி இருக்கீங்க அவனை இன்னும் கொழுத்தலையா, நொறுக்கலையா என்று கேட்டிருக்கீங்க நான் உங்களுக்கு அப்படி என்ன துரோகம் பண்ணினேன். நான் சோசியல் மீடியாவில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன். வாடகை கொடுக்க முடியாமல் காருக்கு டியூ கட்ட முடியாமல் எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு தெரியுமா அதனால என்ன பத்தி இனி எதுவும் அவதூறா பேசாதீங்க அவ்வளவு கஷ்டமும் எனக்குள்ள இருக்கு. 25 வருடமாகிறது ஆனால் இன்னும் பெயருக்கும் புகழுக்கும் எவ்வளவு பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று நானும் இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். அதனால் இப்படி செய்யாதீங்க என கண்ணீரோடு கூல் சுரேஷ் வெளியீட்டுள்ள வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.