Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாக்கு மையங்களின் ஏற்பாடுகள்…. முழுவீச்சில் நடைபெறும் பணிகள்…. ஆட்சியர் நேரில் ஆய்வு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குமையங்களுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோம்பை பேரூராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையங்களில் செய்துள்ள முன்னேற்ப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

இதனைதொடர்ந்து வாக்குபதிவு மையங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் இடங்கள், கணினி அறை, குடிநீர் வசதி, மின் இணைப்பு வசதி, கழிவறை, அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு தனித்தனி தடுப்புகள் அமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்தும் கேட்டறிந்துள்ளார். இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்துள்ளனர்.

 

Categories

Tech |