Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அன்று 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து பிப்ரவரி 22 (நாளை) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முன்னதாகவே வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்புடன் அந்தந்த  வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு தொடர்ந்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளதால் தமிழக காவல்துறை வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டிய பாஸ் (ID Card With Photo) வைத்திருந்தால் மட்டும் அனுமதி.
  •  வேட்பாளர் ஒருவர் மற்றும் ஏஜென்ட் ஒருவரும் Strong Room செல்ல கண்டிப்பாக அனுமதியில்லை.
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டிய பாஸ் (ID Card With Photo) இல்லையெனில் கண்டிப்பாக அனுமதி கிடையாது
  • வேட்பாளர் ஒருவர் மற்றும் ஏஜென்ட் ஒருவரும் RO அலுவலகத்தில் உள்ள CCTV  கேமராவை பார்க்க மட்டும் அனுமதி.
  •  பிரஸ் (Press) நபர்கள் அனுமதி உண்டு & Strong Room செல்ல கண்டிப்பாக அனுமதியில்லை.
  • வேட்பாளர் ஒருவர் மற்றும் ஏஜென்ட் ஒருவர் மட்டும் அனுமதி மற்றும் அவருடைய  செல்போன் மற்றும் வாகனம் கண்டிப்பாக அனுமதியில்லை.

காவல்துறை அறிவுரை

முன்னதாக, பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள சென்னை,மதுரை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள 5 வார்டுகளுக்கு உட்பட்ட 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பதிவான வாக்குகளும்  நாளையே எண்ணப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |