சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு கோரானோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
அதில் வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார் தலைமை தங்கினார். அவர் தலைமையிலான குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அந்த கொரோனா பரிசோதனையில் 50 பேர் கலந்து கொண்டனர். இந்த பரிசோதனையை தாசில்தார் ராஜரத்தினம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.