Categories
அரசியல்

வாக்குச்சாவடி மாறி சென்ற MLA வானதி சீனிவாசன்…. என்ன காரணம் தெரியுமா?….!!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவை டாடாபாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியான காமராஜர் மெட்ரிக் பள்ளிக்கு வாக்களிக்கச் சென்றபோது அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அவருடைய வாக்குச்சாவடி அருகில் இருப்பதாக கூறிய பின்னர், அவர் அருகில் இருந்த சி.எம்.எஸ் பள்ளிக்கு சென்று வாக்களித்தார். இதையடுத்து அவர் தேர்தல் ஏற்பாடுகள் சரியாக இல்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Categories

Tech |