வாக்குசாவடிக்கு மாலை 4.45க்கு பிறகு வாக்களிக்க வந்த நபர்களை தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 60 வாக்குச்சாவடிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7 மணி முதல்மாலை 6 மணி வரை மிகவும் விறுவிறுப்பாக நடந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் வள்ளல்பாரி நடுநிலைப்பள்ளி ஆண்கள் வாக்குச்சாவடி மற்றும் ஒருசில பகுதிகளில் மாலை 4.45க்கு பிறகு வந்த வாக்களர்களை வாக்களிக்க விடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் வாக்களிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் சந்திரா, தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் தேர்தல் விதிமுறைகளை எடுத்துக்கூறி மாலை 6 மணி வரை வாக்களிக்க அனுமதி அளித்துள்ளார். இதற்கு பின்னர் வாக்களிக்காத நபர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.