அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் சரக மோட்டார் வாகன ஆய்வாளராக பூர்ணலதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளர். இந்நிலையில் அப்பகுதி வழியாக செம்மண் ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி எடை போடுமாடு கூறியுள்ளார்.
அப்போது வாகனத்தில் இருந்தவர்களுக்கும் அதிகாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பூர்ணலதா, தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி 2 பேர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.