Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகன சோதனையின் போது தெரிந்த உண்மை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

வாகன சோதனையின் போது காவல் துறையினரால் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுரபாக்கம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் ஒரு குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது 15 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதில் மொத்தம் 480 மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பிறகு மினி லாரியை ஓட்டி வந்த சுரேஷ் மற்றும் கௌதம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |