Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்…. முழு விவரம் இதோ…!!!!

14 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வருகிற ஏப்ரல் 16-ந்தேதி(இன்று) பிரம்மாண்டமான முறையில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது. இந்நிலையில் தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நாளை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி காமராஜர் சாலையில் இருந்து அண்ணாசாலை, ஈவேரா சாலை செல்பவர்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் இருந்து திரும்பி வாலாஜா, அண்ணா பல்லவன் சாலைகள் வழியாக அடையலாம். ராஜாஜி சாலை பாரி முனையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள் வடக்குக் கோட்டை பக்கம், முத்துசாமி, ஈவேரா, பல்லவன், அண்ணா வாலாஜா சாலை வழியாக அடையலாம்.

Categories

Tech |