Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்!….. நாளை முதல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை….. ஏஎஸ்பி திடீர் எச்சரிக்கை….!!!

சிவகங்கை மாவட்ட காரைக்குடி பெரியார் சிலை அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் பேரணியை தொடங்கி வைத்த பிறகு தலைகவசம் அணிந்தவர்களுக்கு காரைக்குடி ஏ.எஸ்.பி.ஸ்டாலின் இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து தலைகவசம் அணியாமல் வந்தவர்களுக்கு புதிய போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபதாரம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாளை முதல் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும். அதனைப் போல கார்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்ட வேண்டும் இல்லையென்றால் புதிய போக்குவரத்து விதிமுறைகளின் படி அபராதம் தொகை கட்ட வேண்டும்.

ஹெல்மெட் போடவில்லை என்றால் ரூ.1000 அபராதம், பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் மேலும் ஆயிரம் அவதாரம் விதிக்கப்படும். இதனைத் தொடர்ந்து லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிவந்தால் ரூ.5000, செல்போன் பேசியப்படி வாகனம் ஓட்டினால் ரூ.5000, நான்கு சக்கர வாகனத்தில் வருவார்கள் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10,000, மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10000 அபராதம் கட்ட வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் காரைக்குடி சரகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. எனவே அனைவரும் கண்டிப்பாக போக்குவரத்து புதிய விதிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |