நாளை புது வருடம் 2002 பிறக்க உள்ளது. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வாகனங்களை குடிபோதையில் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கோவை மாவட்ட எஸ்பி செல்வரத்திதினம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் சோதனைச்சாவடியை ஆய்வு செய்த அவர் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு முறையான போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.
மேலும் தனியார் பேருந்துகளில் நடத்துனரை தவிர வேறு யாரும் படியில் நின்று பணிகள் மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மக்கள் பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட ஒத்துழைக்கவேண்டும். அரசு விதித்துள்ள விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 1300 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் .மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.