சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க முக்கியமான 11 இடங்களில் 15 தானியங்கி நம்பர் பிளேர் ரீடர் பொருத்தப்பட்டு இருப்பதாக சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது. இதனால் ஹெல்மெட் போடாமல், சாலை விதிமுறைகளை மீறி சென்றால் அந்த கேமராவில் நம்பர் பிளேட் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் சாலை விபத்துகளை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது விரைவில் தமிழக முழுவதும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.