வேலூர் மாவட்டத்தில் நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் டிரைவிங் லைசன்ஸ் தானாகவே ரத்தாகி விடும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் எப்போதும் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதே இதற்கு காரணம் என போக்குவரத்து போலீசார் கூறுகின்றனர். அதனால் வேலூர் போக்குவரத்து போலீசார் இன்று முதல் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர்.
அதன்படி நோ பார்க்கிங்கில் 3 முறை வாகனத்தை நிறுத்தி சிக்கினால், 4வது முறை விதிமீறியவர்களின் டிரைவிங் லைசன்ஸ் தானாகவே ரத்தாகிவிடும். அபராதம் செலுத்தும் விவரம் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படும். இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.