Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்!…. அதிரடியில் இறங்கிய காவல்துறை…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொது இடங்களில் வாகன நெரிசலை தடுப்பதற்கு போக்குவரத்துதுறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் பல்வேறு சாலையில் வாகனங்களில் வருபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம், பதிவு செய்யப்பட்ட உரிய வாகன பலகை வைத்திருக்க வேண்டும், அரசு அறிவித்துள்ள பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் ஆகிய விதிகள் இருக்கிறது. இந்நிலையில் விதிகளை மீறி நம்பர் பிளேட் அமைத்திருந்த வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே அரசு விதிகளின் அடிப்படையில் உரிய அளவு மற்றும் நிறங்களில் நம்பர் பிளேட் வைத்திருக்க வேண்டும். எனினும் அதை ஏராளமானோர் பின்பற்றுவதில்லை. தங்களின் விருப்பத்தின்படி வண்ணங்கள், பெயர் ஆகியவைகளை நம்பர் பிளேட்டில் வரைந்து வாகன எண்ணையே மறைத்து விடுகின்றனர். இதன் காரணமாக சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகன எண்ணை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அண்மைகாலமாக இது போன்ற நிகழ்வுகள் அதிகளவு நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னையில் மார்ச் 19, 20 போன்ற 2 நாட்களில் 73 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு தணிக்கை வாகன சோதனையில் தவறான நம்பர் பிளேட் வைத்திருந்தவர் வாகனங்கள், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த 2,306 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் உரிய இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும், விதிமுறைகளின் அடிப்படையில் நம்பர் பிளேட் அமைக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |