Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த கலால் வரி குறைப்பால் பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைந்துள்ளது. இதையடுத்து மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தன.

இந்தநிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே அது பொருந்தும். பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மீது லிட்டருக்கு 25 ரூபாய் நிவாரணமாக அரசாங்கம் வழங்கும். ஜனவரி 26-ஆம் தேதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |