Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி யுபிஐ மூலம்…. அதிரடி அறிவிப்பு…!!!

கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதால் பெரும்பாலான விபத்துகளும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு அபராதம் உள்ளிட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்கள் இடம் இனி யுபிஐ மூலம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அதனை மேலும் எளிமையாக்கும் விதமாக அனைத்து மின்னணு பரிவர்த்தனைகள் மூலமும் அதிகாரிகளிடம் இ-சலான் இயந்திரம் மூலம் பணம் செலுத்தும் வகையிலும் எளிமையாக பட்டுள்ளது.

Categories

Tech |