Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…. ரூ.1000 அபராதம்…. மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கை….!!!!

இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கத்திலும் சாலை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான அறிவிப்புகளை அவ்வபோது அத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பார்க்கின் தொடர்பான அறிவிப்பு ஒன்றை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

அதன்படி சாலையோரங்களில் தேவையில்லாமல் வாகனங்களை பார்க்கிங் செய்து வைத்தால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறிய அவர்,விரைவில் இதற்கான சட்டம் ஒன்று இயற்றப்பட்ட விதிமுறைகள் அதற்கு வகுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதாவது தேவையில்லாமல் வாகனங்களை சாலையோரங்களில் யாராவது நிறுத்தி வைத்தால் அவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்.

இந்தத் திட்டத்தில் பொது மக்களுக்கு நன்மைகளும் உள்ளன. அதாவது தவறான இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டு இருப்பதை போட்டோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு வெகுமதியாக 500 ரூபாய் அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும். மேலும் அரசு சாலைகளை போட்டு வைப்பது வாகனங்களை பார்க்கிங் செய்து வைப்பதற்கு அல்ல எனவும் வீடு கட்டுபவர்கள் அதனுடன் பார்க்கிங் வசதியையும் அமைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |