நாடு முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றது. அதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சிஎன்ஜி விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சிஎன்சி என்பது வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு. இந்நிலையில் நேற்று முதல் சிஎன்ஜி கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் இதன் விலை கிலோவுக்கு 2.5 ரூபாய் உயர்த்தப்பட்டு 64.11 ரூபாயாக உயர்ந்துள்ளது.
டெல்லியில் நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இதன் விலை உயர்வால் ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் பொதுவான சிஎன்ஜி வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தற்போது சிஎன்சி விலையும் உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.