Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி… மர்மநபர்கள் செய்த காரியம்… போலீசார் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள கைனூர் நேதாஜி நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கங்கம்மாள் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அன்று இரவு உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அரக்கோணம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கனகம்மாள் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். இதில் கனகம்மாள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் இச்சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |