லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காயகரை பகுதியில் இருக்கும் கல்குவாரியில் இருந்து பாறைப்பொடி ஏற்றுக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி காயக்கரை இரட்டைகரை பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட்டது. அப்போது சாலையோரம் ஒதுங்கிய லாரி எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.