Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வழிமறித்து மிரட்டிய வாலிபர்…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

வியாபாரியிடம் இருந்து பணம் பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளுவண்டியில் வெங்காய வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி மாரியப்பனிடமிருந்து 1000 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து மாரியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக மணிகண்டன், தங்கம், வினித் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |