லண்டனில் சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தொடர்பான தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
லண்டன் வெல்லிங்கில் பகுதியில் வசிக்கும் சிறுமி கடந்த 23ஆம் தேதி 16:20 மணிக்கு வழக்கம்போல் நடன வகுப்பிற்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் ஆண் ஒருவர் சிறுமியை இழுத்து கீழே தள்ளி கட்டிப் பிடித்துள்ளார். சிறுமி கீழே விழுந்ததால் காயங்களும், அவரின் நகங்கள் பட்டதால் கழுத்துப்பகுதியில் கீறல்களும் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த நபரிடம் இருந்து தப்பித்து ஓடிய சிறுமி நடந்ததை தன் தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபரின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் அவரின் சிசிடிவி புகைப்படம் மற்றும் அவர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த நபர் குறித்து யாராவது அறிந்தால் உடனடியாக காவல்துறையினரிடம் சந்திக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.