சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி சேர்ந்த கோகுல்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல வழிப்பறி வழக்குகள் இருக்கிறது. இது பற்றி புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலத்தை கைது செய்துள்ளனர். இதே போன்று முள்ளுவாடி கேட் மக்கான் தெருவை சேர்ந்த ஜாபர் அலி என்பவர் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மிரட்டி பணம், செல் போன் பறித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அந்த பகுதியில் உள்ள வாலிபரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி பணம் நகையை பறித்துள்ளார். தொடர்ந்து எடப்பாடி உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளில் புகுந்து நகை பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் அம்மாபேட்டையை சேர்ந்த பாலமுருகன். இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் நான்கு பேரும் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பின் தொடர்ந்து வழிபறிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீசார், துணை கமிஷனர் மாடசாமி கமிஷனர் நஜ்மல் ஹோடாவிற்கு பரிந்துரை செய்துள்ளார். இதன் பெயில் அவர்கள் நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் கமிஷனர் நஜ்மல் ஹோண்டா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சேலம் சிறையில் உள்ள கோகுல்நாத், ஜாபர் அலி, கார்த்திக், பாலமுருகன் போன்ற நான்கு பேரிடம் குண்டர்த் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கியுள்ளனர்.