வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலை ரோட்டோரமாக ராஜாராம் மற்றும் அவரின் நண்பர் சதீஷ் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ராஜாராமை தனியாக அழைத்து எந்த ஊர் என கேட்டதோடு தனியாக பேச வேண்டும் எனக் கூறி சிறிது தூரம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது ராஜாராம் சட்டை பையில் இருந்த 550 எடுத்துக்கொண்டு செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் ராஜாராம் மற்றும் சதீஷ் கூச்சலிட்டததனால் சிறிது தொலைவில் இருந்தவர்கள் ஓடி வந்தார்கள். இதனால் வழிப்பறி செய்த இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள். இதையடுத்து போலீசார் புகாரின் பேரில் விசாரணை செய்து ஜெயப்பிரகாஷ் மற்றும் காளிமுத்து உள்ளிட்ட இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தார்கள்.