Categories
மாநில செய்திகள்

வள்ளலார் முப்பெரும் விழா…. ரூ.200 கோடியில் சர்வதேச மையம்….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…..

சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் வள்ளலார் முப்பெரும் விழா குறித்து தமிழக அரசு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவின் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வரலாறு 200 என்ற தலைப்பில் முப்பெரு விழாவாக அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் அடுத்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை 52 வாரங்கள் கொண்டாடப்பட உள்ளது. வள்ளலார் பெருமையை பறைசாற்றுகின்ற வகையில் தமிழக முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த குழுவோடு ஆலோசிக்கப்பட்டு 10 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து வள்ளலாரின் இலட்சியினை மற்றும் அதில் இடம்பெறக்கூடிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அதுமட்டுமில்லாமல் அக்டோபர் மாதம் தொடங்கும் முதல் நிகழ்ச்சியை எங்கு நடத்துவது என்பது குறித்து முதல்வரிடம் தெரிவித்து முடிவெடுக்கப்பட உள்ளது . வள்ளலாரின் சிறப்புகளை எடுத்து கூறும் முதல் பத்து நிகழ்ச்சிகளில் யார் யாரை வைத்து எந்த ஊர்களில் நடத்துவது என்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அறிவிக்கப்படும். வள்ளலார் சாலை நிறுவப்பட்ட இடத்திற்கு 200 கோடில் வள்ளலார் சர்வதேச மையம் ஒன்று நிறுவுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் இந்த குழு சிறப்பு குழுவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கால அளவு எதுவும் நிர்ணயிக்க வில்லை. இதனைத் தொடர்ந்து வள்ளலார் சன்மார்க் ஆராய்ச்சி நிலையம் ஒன்றையும் ஏற்படுத்துவதற்கான அனுமதி முதல்வரிடம் பெற உள்ளது. இதனையடுத்து விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பதை விமர்சனம் ஆக்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. தமிழில் அர்ச்சனை என்பது இப்போது தொடங்கப்பட்ட திட்டம் இல்லை என்றும் கலைஞர் கொண்டு வந்த திட்டத்தை புத்துணர்வு ஊட்டும் வகையில் திருக்கோயில்களில் அன்னைத் தமிழ் வழிபாடு என விளம்பர பலகை வைக்கப்பட்டு, அதில் அர்ச்சகர்களின் பெயர்களும் கைபேசி எண் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பூஜைக்கான கட்டணத்தில் 60% தொகை அமைச்சர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |