Categories
சினிமா தமிழ் சினிமா

வளர்ந்து கொண்டே போகும் ஜி.பி.முத்து…. சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்…!!!!!

ஜி.பி.முத்து தற்போது வளர்ந்து வருகின்றார்.

டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து  தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக களம் இறங்கினார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கின்றார். இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இவர் பிக்பாக்ஸில் என்ட்ரி கொடுத்து பின் சில காரணங்களால் விளக்கினார்.

இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து விலகிய ஜிபி முத்துவிற்கு ஜாக்பாட் கிடைத்திருக்கின்றது. விக்னேஷ் சிவன் அஜித் இணையும் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு ஜி.பி.முத்துவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஜிபி முத்து இதுவரை சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது பெரிய பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாகும். இது ஒருபுறம் இருக்க மற்றொருபறம் அரசியலிலும் இவர் பெயர் டிரண்டாகி வருகின்றது.

அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஜி.பி.முத்து என் தாத்தா, என் அப்பா, என் அம்மா என என் பரம்பரையே அதிமுக தான். எனக்கு முன்னாள் முதல்வரான ஜெயலலிதா அம்மாவை ரொம்ப பிடிக்கும். அவர் இறந்தபோது நான் அழுதேன் எனக் கூறியிருந்தார். இந்த வீடியோவை தற்போது அதிமுக தொண்டர்கள் வைரலாக்கி வருகின்றார்கள். தற்போது ஜிபி முத்து சினிமா மற்றும் அரசியல் தளங்களில் அதிக அளவு பேசப்பட்டு வருகின்றார். மேலும் சோசியல் மீடியாவிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றார்.

Categories

Tech |