பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சி கழக வீரர்கள் ஆசிய வலுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது .இந்த போட்டி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் சார்பாக சேரன்மாதேவி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சிக் கழகத்தில் பயின்று வரும் மாணவர் ராகுல் ரோஹித் கலந்து கொண்ட இவர் சப் ஜூனியர் 59 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
பின்னர் அதே உடற்பயிற்சி கழகத்தில் பயின்று வரும் பாளையங்கோட்டையை சேர்ந்த ராகுல் என்பவர் ஜூனியர் 120 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.