வலி இல்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அரசே முன்வந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான புதிய இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல கருணைக்கொலை ஆர்வலரான டாக்டர் பிலிபி நிட்சே என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
தற்கொலை செய்துகொள்ள விரும்புபவர்கள், அந்த இயந்திரத்தில் படுத்துக் கொண்டு அந்த இயந்திரம் கேட்கக்கூடிய 2 கேள்விகளுக்கு பதிலளித்து, அந்த இயந்திரத்தில் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும். ஒரு நிமிடத்தில் உயிர் பிரிந்து விடுமாம். மேலும் சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு மட்டும் 1,300 கருணைக் கொலைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்து கொள்வது தவறு என்று கூற வேண்டிய இடத்தில் தற்கொலை செய்துகொள்வதற்கான இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடுகளிடையே ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.