தமிழ் திரையுலகில் பிரபலமாக அசத்தி வந்தவர் சோனியா அகர்வால். இவர் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஒரு கல்லூரியின் கதை, 7 ஜி ரெயின்போ காலனி, மதுர, வானம் , கோவில், சதுரங்கம் திருட்டு பயலே, உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனை கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். ஆனால் இத்தனை வருடங்களாக இதை பற்றி இதுவரை எதுவும் பேசிக்கொள்ளாத சோனியா அகர்வால் தற்போது இவர் கூறியுள்ளதாவது,
“செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றியபோது அவரது கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. என்னையும் அவருக்கு பிடித்தது. இதனால் காதலிக்க ஆரம்பித்தோம். பின்னர் திருமணமும் செய்து கொண்டோம். அதன்பிறகு சில விஷயங்களில் உடன்படாத மனநிலை உள்ளிட்ட சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்தோம். திருமணம் செய்து கொள்ளும்போது மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் விவாகரத்து செய்யும்போது மன வலியோடு பிரிந்தோம்’’ என்று கூறினார்.