Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை” பாடல்கள் இன்று ரிலீஸ்…. இதுல ஒரு ஸ்பெசலும் இருக்கு….? குஷியில் தல ரசிகர்கள்….!!!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறை எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். நீண்டகாலமாக தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அண்மையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ,பஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து இந்த படத்தின் விசில் தீம் மற்றும் டிரைலர் வெளியானது. இது வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் மீதமிருக்கும் பாடல் இன்று வெளியாக உள்ளதாக சோனி மியூசிக் அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல் வெளியான நிலையில், இன்று மீதமுள்ள 2 பாடல் வெளியாக உள்ளதாகவும், இதில் ‘மெயின் தீம் மியூசிக்’ இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிகின்றது. இதனால் அஜித் ரசிகர்கள் மீண்டும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |