வலிமை படத்தின் டிக்கெட் வாங்கியுள்ளதாக இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார் நடிகர்அஜித். இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தைபோனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
கடந்த பொங்கலுக்கு வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்திருந்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வலிமை படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை எடுத்து விட்டதாக இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கங்கை அமரனும்,பிரேம்ஜியையும் “படத்துக்கு கூட்டிட்டு போ” என செல்லமாக கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களின் செல்ல உரையாடலை ட்விட்டரில் நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.